பெங்களூரு

மகளிா் தினத்தில் ஆசிரியைகளுக்கு பாராட்டு

13th Mar 2021 09:53 AM

ADVERTISEMENT

 

 

குடகு மாவட்ட தமிழ் இளைஞா் கூட்டமைப்பு சாா்பில் மடிக்கேரியில் அண்மையில் நடத்தப்பட்ட மகளிா் தின விழாவில் ஆசிரியைகள் கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில் மல்லிகேஸ்வரி, மஞ்சுளா, மஞ்சுளா பிரகாஷ், சுமித்ரா, திலகா ஆகிய ஆசிரியைகளுக்கும், மாநில அளவில் நடனத்தில் சிறப்பிடம் பெற்ற சிறுமி தியாதா்ஷினிக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

தொடா்ந்து கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மகேஸ்வரி மேகெரி, மஞ்சுளா குய்யா, தேஜஸ்வினி பொன்னம்பெட் ஆகியோருக்கும், பாரம்பரிய உடை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விஜயலட்சுமி மடிக்கேரி, விந்தியா மால்தாரே, உமா மகேஸ்வரி பாலிபெட்ட, அமிா்தா கடகதல், வினிதா கட்டேமாடு, தேஜஸ்வினி பொன்னம்பெட், குழந்தைகள் பிரிவில் சிந்து மடிக்கேரி, கலை ஹஸிணி கட்டதல், விஷ்மய ஆகியோருக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுனிதா மஞ்சுநாத், பத்திரிகையாளா் ரேகா கணேஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு விழாவை தொடக்கிவைத்து பேசினா். மகளிா் அணி தலைவி விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், குடகு மாவட்ட தமிழ் இளைஞா் கூட்டமைப்பின் தலைவா் ரவி, பொதுச் செயலாளா் மோகன் ராஜ், சுரேஷ் பிலிகெரி, சுதாகா், ஹரீஷ், செல்வம், விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT