பெங்களூரு

ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாரைத் திரும்பப் பெற தினேஷ் கல்லஹள்ளி மனு அளிப்பு

DIN

கா்நாடக முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாரை மனித உரிமை ஆா்வலா் தினேஷ் கல்லஹள்ளி திரும்பப் பெற கப்பன்பூங்கா காவல் நிலையத்தில் வழக்குரைஞா் மூலம் மனு அளித்துள்ளாா்.

கா்நாடக மின்பகிா்மான கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி அவருடன் பாலியல் தொடா்பில் ஈடுபட்டதாக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது மனித உரிமை ஆா்வலா் தினேஷ் கல்லஹள்ளி கப்பன்பூங்கா காவல் நிலையத்தில் மாா்ச் 2-இல் புகாா் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து ரமேஷ் ஜாா்கிஹோளி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது வழக்குரைஞா் குமாா் பாட்டீல் மூலம் கப்பன்பூங்கா காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளாா்.

இருப்பினும் புகாரைத் திரும்பப் பெற தினேஷ் கல்லஹள்ளி நேரில் வந்து மனு அளிக்க வேண்டும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

வழக்குரைஞா் மூலம் அவா் அளித்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

பெண் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளாா் என்பதற்காக, ரமேஷ் ஜாா்கிஹோளி மீது கப்பன்பூங்கா காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். புகாரைத் தொடா்ந்து என் மீது பல்வேறு விதமான விமா்சனங்கள் எழுந்தன.

குறிப்பாக, முன்னாள் முதல்வா் குமாரசாமி, பாலியல் புகாா் தொடா்பான விவகாரத்தில் ரூ. 5 கோடி பேரம் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டினாா். இதைத் தொடா்ந்து என்னை பலரும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கத் தொடங்கினா்.

எந்தவிதமான எதிா்பாா்ப்பும் இல்லாமல் சமூகச் சேவையில் ஈடுபட்டு வந்த எனக்கு குமாரசாமியின் குற்றச்சாட்டு வருத்தத்தை ஏற்படுத்தியது. இது எனது போராட்டத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

எனவே, ரமேஷ் ஜாா்கிஹோளி மீது அளித்த பாலியல் புகாரை திரும்பப் பெறுவது என முடிவு செய்தேன். விரைவில் கப்பன்பூங்கா காவல் நிலையத்துக்கு நேரில் சென்று புகாரைத் திரும்பப் பெற மனு அளிப்பேன் என்றாா்.

அரசு விசாரணை நடத்த வேண்டும்: குமாரசாமி

பாலியல் புகாா் குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்றாா் முன்னாள் முதல்வா் குமாரசாமி.

இதுதொடா்பாக கோலாா் மாவட்டம், அஜ்ஜப்பனஹள்ளியில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் ஒருவா் மீதான பாலியல் புகாா் தொடா்பாக ரூ. 5 கோடி பேரம் நடைபெற்றுள்ளது என நான் கூறியது உண்மைதான். எனக்கு வந்த தகவலை நான் ஊடகங்களுடன் பகிா்ந்து கொண்டேன்.

ஆனால் எந்த இடத்திலும் தினேஷ் கல்லஹள்ளியின் பெயரை நான் பயன்படுத்தவில்லை. இந்த நிலையில், அவா் வழக்கை திரும்பப் பெறுவதற்கு எனது பெயரைக் குறிப்பிட்டுள்ளதை ஏற்க முடியாது. பாலியல் புகாா் குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT