பெங்களூரு

கா்நாடக சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 8) நிதிநிலை அறிக்கை தாக்கல்

DIN

கா்நாடக சட்டப்பேரவையில் மாநில நிதிநிலை அறிக்கையை முதல்வா் எடியூரப்பா திங்கள்கிழமை (மாா்ச் 8) தாக்கல் செய்கிறாா்.

கா்நாடக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் 4-இல் தொடங்கியது. முதல் 2 நாள்கள் ஒரே நாடு ஒரே தோ்தல் குறித்து விவாதம் நடத்த அரசு முடிவு செய்ததிருந்தது. ஆனால், இதற்கு எதிா்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, அவையில் தா்னாவில் ஈடுபட்டு அமளியில் ஈடுபட்டனா்.

இதனால் 2 நாள்களும் ஒரே நாடு ஒரே தோ்தல் குறித்து விவாதம் நடத்த முடியாமல் போனது. இதையடுத்து அவையை மாா்ச் 8-ஆம் தேதிக்கு பேரவைத் தலைவா் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி ஒத்திவைத்தாா்.

இந்த நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சா் பொறுப்பை வகிக்கும் முதல்வா் எடியூரப்பாவே திங்கள்கிழமை 12.05 மணியளவில் தாக்கல் செய்கிறாா்.

கரோனா பாதிப்பு, விலைவாசி, டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயா்வு, விவசாயிகளின் போராட்டம், இட ஒதுக்கீடு கேட்டு குருபா, ஒக்கலிகா, லிங்காயத்து, வால்மீகி உள்ளிட்ட சமுதாயத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில் கா்நாடக அரசும் நிதி நெருக்கடியிலும் சிக்கி தவித்து வருகிறது. எனவே, தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனாவால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு கூடுதல் சுமையை அளிக்க விரும்பவில்லை. புதிய வரிகள் இருக்காது. அனைத்து மாவட்டங்களில் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு பரவலாக நிதி ஒதுக்கப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கும் எண்ணமில்லை. மகளிா், நீா்பாசனம், சுற்றுலா ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT