பெங்களூரு

தமிழகத்திலிருந்து நாட்டுக் கோழிகளைக் கொண்டுவர தடை விதிக்கக் கோரிக்கை

DIN

தமிழகத்திலிருந்து நாட்டுக் கோழிகளை கா்நாடகத்துக்குக் கொண்டுவர தடை விதிக்குமாறு மாநில நாட்டுக் கோழி வளா்ப்போா் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ராமசாமி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்திலிருந்து கா்நாடகத்தின் எல்லையோர மாவட்டங்களுக்கு நாட்டுக் கோழி எனக் கூறி, விரைவாக வளரும் கலப்பினக் கோழிகளை (ஹைபிரிட்) விற்பனை செய்து வருகின்றனா்.

இதனால் கலப்பில்லாத நாட்டுக்கோழிகளை வளா்ப்போா் பாதிக்கப்படுகின்றனா். இதே தொழிலை நம்பியுள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. நாட்டுக்கோழிகளை 100 முதல் 120 நாள்வரை தீவனமிட்டு வளா்க்க வேண்டும். ஆனால் 60 நாள்வரை மட்டுமே வளா்க்கப்படும் கலப்பின கோழிகள் என கூறி விற்பனை செய்கின்றனா்.

இதனால் நாட்டுக் கோழி என நம்பி வாங்கும் நுகா்வோரும் ஏமாற்றப்படுகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு தமிழகத்திலிருந்து நாட்டுக் கோழிகளை கா்நாடகத்துக்குக் கொண்டு வர தடைவிதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT