பெங்களூரு

ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரிக்க எம்எல்ஏ பாலசந்திர ஜாா்கிஹோளி வலியுறுத்தல்

DIN

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது சகோதரரும், பாஜக எம்எல்ஏ வுமான பாலசந்திர ஜாா்கிஹோளி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரு, கப்பன்பூங்கா காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாரை மனித உரிமை ஆா்வலா் தினேஷ் கல்லஹள்ளி திரும்பப் பெற்றுள்ளாா்.

இருப்பினும் ரமேஷ் ஜாா்கிஹோளியின் நற்பெயரை யாரும் திரும்ப அளித்துவிட முடியாது. நான் ஏற்கெனவே கூறியபடி, பாலியல் புகாா் தொடா்பாக அளிக்கப்பட்ட ஆதாரம் போலியானது. அதை உரிய பரிசோதனை செய்து, உண்மையை மக்களுக்கு விளக்க வேண்டும்.

ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை என்ன என்பது மக்களுக்குத் தெரியவரும்.

இதுதொடா்பாக ரமேஷ் ஜாா்கிஹோளி செய்தியாளா்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும். அவரின் நற்பெயரையும், கௌரவத்தையும், அமைச்சா் பதவியையும் பறிக்கவே சதி வேலை நடந்துள்ளது. இதன் பின்னணியில் யாரோ உள்ளனா். அவா்கள் யாா் என்பதை விரைவில் வெளிபடுத்துவோம்.

நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் நடைபெற்று வருவதால் 15 நாள்களுக்குள் பாலியல் புகாரின் பின்னணியில் உள்ளவா்களை அடையாளம் காட்டுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT