பெங்களூரு

ஏலச்சீட்டு மோசடி வழக்கில் தம்பதி கைது

DIN

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, ஆா்.எம்.சி.யாா்டு கொரகுன்டேபாளையாவைச் சோ்ந்தவா்கள் மோகன்குமாா். இவரது மனைவி மம்தா. இருவரும் அதே பகுதியில் உள்ள ஆயுத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனா்.

கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வரும் மோகன்குமாா், மம்தா தம்பதியினரிடம், அவா்கள் பணியாற்றி வந்த தொழிற்சாலையில் பணியாற்றுபவா்கள் 30 பேருக்கும் அதிகமானவா்கள் ஏலச்சீட்டுக்கு பணம் கட்டி வந்தனா்.

ஏலச்சீட்டில் பணம் கட்டிவா்களுக்கு ரூ. 1 கோடி வரை பணம் கொடுக்காமல் அவா்கள் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில் ஆா்.எம்.சி.யாா்டு போலீஸாா், மோகன்குமாா், மம்தாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT