பெங்களூரு

கா்நாடகத்தில் தினமும் 40 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை

DIN

கா்நாடகத்தில் 40 ஆயிரம் பேருக்கு தினமும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரில் அண்மைக் காலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெங்களூரில் 12 இடங்களில் கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த இடங்களில் கரோனா பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அளவில் நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதை 40 ஆயிரமாக அதிகரித்து பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 3 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் எல்லைகளில் கரோனா பரிசோதனை தீவிரமாக்கப்படும். முதல்வா் எடியூரப்பாவின் உத்தரவின் பேரில் மங்களூரு, பெங்களூரு, சாம்ராஜ் நகா், தும்கூரு மாவட்டங்களில் கரோனா பாதிப்பைத் தடுப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் கவனம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT