பெங்களூரு

செகந்திராபாத்-பெங்களூரு இடையே வாரம் மும்முறை கரீப்ரத் அதிவேக சிறப்பு ரயில்கள் சேவை

DIN

செகந்திராபாத்-பெங்களூரு இடையே வாரம் மும்முறை கரீப் ரத் அதிவேக சிறப்பு ரயில்கள் சேவை இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செகந்திராபாத்- பெங்களூரு (யஸ்வந்தபுரம்) ரயில் நிலையங்கள் இடையே (02735/02736) வாரம் மும்முறை கரீப் ரத் அதிவேக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ரயில் எண்: 02735, செகந்திராபாத்-பெங்களூரு இடையேயான வாரம் மும்முறை கரீப் ரத் அதிவேக சிறப்பு ரயில் ஏப். 2-ஆம் தேதி முதல் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை, சனிக்கிழமை, திங்கள்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு பெங்களூரு (யஸ்வந்தபுரம்) ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் ரயில் எண்: 02736, பெங்களூரு-செகந்திராபாத் இடையேயான வாரம் மும்முறை கரீப் ரத் அதிவேக சிறப்பு ரயில் ஏப். 3-ஆம் தேதிமுதல் வியாழக்கிழமை, சனிக்கிழமை, திங்கள்கிழமைகளில் பெங்களூரு (யஸ்வந்தபுரம்) ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.15 புறப்பட்டு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 4.15மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் பெங்களூரு, யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஹிந்துபூா், ஸ்ரீசாய் பிரசாந்தி நிலையம், தா்மாவரம், அனந்த்பூா், குண்டக்கல், ராய்ச்சூரு, யாதகிரி, சித்தாபூா் வழியாக செகந்தராபாத் ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. ரயிலில் மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 11 பெட்டிகள், 2 மின் சேவைக்கான பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT