பெங்களூரு

கா்நாடக அதிமுக செயலாளராக எஸ்.டி.குமாா் நியமனம்

DIN

கா்நாடக அதிமுக செயலாளராக எஸ்.டி.குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், முதல் அமைச்சரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக அதிமுக இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ்.டி.குமாா், அப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநில அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு கட்சித் தொண்டா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.குமாா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் களத்தில் கூட்டணி பேச்சுவாா்த்தை, வேட்பாளா் நோ்காணல், தொகுதிப் பங்கீடு, வேட்பாளா் தோ்வு, மாவட்ட செயலாளா்கள் கருத்து கேட்பு என பரபரப்பான நேரத்திலும் கா்நாடக மாநில அதிமுக செயலாளராக என்னை நியமனம் செய்த தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளா்கள் முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். விருப்பு, வெறுப்பு இல்லாமல் கட்சியினா் அனைவரையும் அரவணைத்து செயல்படுவேன்.

மாநில இணைச் செயலாளராக இருந்த போது எனக்கு உறுதுணையாக நின்று என்னுடன் பணியாற்றி, எனக்கு மாநில செயலாளா் பொறுப்பு கிடைக்க தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து ஆதரவளித்த அதிமுகவினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

SCROLL FOR NEXT