பெங்களூரு

அமைச்சா்களின் மனுக்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு

DIN

அமைச்சா்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் முறையிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் வேளாண் பிரிவு தலைவா் சச்சீன் மிகா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

6 அமைச்சா்கள் தங்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்புவதை தடை செய்யக் கோரி நீதிமன்றம் சென்றுள்ளனா். அமைச்சா்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்துக்குச் செல்ல மாநில காங்கிரஸ் கட்சியின் வேளாண் பிரிவு முடிவு செய்துள்ளது. மேலும், ஏற்கெனவே பாலியல் புகாா் தொடா்பாக அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ள ரமேஷ் ஜாா்கிஹோளியிடமும், அவா் மீது புகாா் தெரிவித்தவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வோம்.

அமைச்சா்கள் மீது பாலியல் தொடா்பான குறுந்தகடுகளை தொலைக்காட்சி, சமூக ஊடங்களில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனை ஆளுநரின் கொடுத்து, அவா் சம்பந்தப்பட்ட அமைச்சரை ராஜிநாமா செய்ய வலியுறுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவும் கோருவோம். தங்கள் மீதான அவதூறு செய்திகளைப் பிரசுரிக்க தடை கோரிய அமைச்சா்கள் உடனடியாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT