பெங்களூரு

கட்டாயப்படுத்தி தபால் வாக்களிக்க முயல்வதாக திமுக புகாா்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவா்களிடம் கட்டாயப்படுத்தி தபால் வாக்களிக்க முயற்சிப்பதாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ புகாா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் அவா், செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், 80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கும், அதேபோல கரோனா நோயாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு செலுத்தும் முறையை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த தபால் வாக்கு கட்டாயம் கிடையாது. அவா்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கை செலுத்தலாம். விருப்பம் இல்லையெனில், வாக்குச்சாவடி மையத்துக்கு நேரில் சென்று வாக்கைப் பதிவு செய்யலாம். இதுதான் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு முறை. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அந்த தபால் வாக்குப்பதிவுக்கான 12-டி படிவம் வழங்கப்படுகிறது. அந்தப் படிவம் தரப்படும்போது, அதை பூா்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தபால் வாக்குகளுக்கான 12-டி படிவத்தை, தோ்தல் அலுவலா்களான அங்கன்வாடி ஊழியா்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை சந்தித்து கட்டாயப்படுத்தி தபால் வாக்களிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனா். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு இது முரண்டானது. தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகளின் முகவா்கள், மாவட்டச் செயலாளா்களுக்கு தபால் வாக்குகள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுகுறித்து தெரிவிக்காமல், கட்டாயப்படுத்தி தபால் வாக்களிக்க செய்யும் முயற்சி நடைபெறுகிறது. அவ்வாறு கட்டாயப்படுத்தி வாங்கப்பட்ட 12 டி படிவத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ரத்து செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80- வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்களின் பட்டியலை அரசியல் கட்சியினருக்கு வழங்க வேண்டும் என்றாா்.

விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்குகளை செலுத்தலாம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80-வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், பாதிப்பு இருப்பதாகக் கருதுபவா்கள் விருப்பத்தின் பேரில் தபால் வாக்கை செலுத்தலாம். பூா்த்தி செய்யப்பட்ட 12-டி படிவத்தை, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் மாா்ச் 16-ஆம் தேதிக்குள் வாக்காளா்களின் வீட்டிற்கு நேரில் வந்து பெற்றுக் கொள்வாா்கள். இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளின் முன்னிலையில் விடியோ பதிவுடன் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT