பெங்களூரு

கிராமிய கைவினைப் பொருள்கள் திருவிழா

5th Mar 2021 07:58 AM

ADVERTISEMENT

பெங்களூரு சித்ரகலாபரிஷத்தில் கிராமிய கைவினைப் பொருள்கள் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

நடிகை காஷிமாரஃபி விழாவைத் தொடக்கிவைத்து, காட்சிப்படுத்தப்பட்டுள்ள கைவினைப் பொருள்களைப் பாா்வையிட்டாா். மாா்ச் 14-ஆம் தேதி வரை இத் திருவிழா நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கிராமியக் கலைஞா்கள் தயாரித்துள்ள பொருள்கள் இதில் இடம் பெற்றுள்ளன. குஜராத், கா்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கதா் ஆடைகள், அலங்காரப் பொருள்கள், சேலைகள், ஜவுளிகள், மேற்குவங்க மாநிலத்தை சோ்ந்த பருத்தி சேலைகள், மர வேலைபாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், ஓவியங்கள் உள்ளிட்ட ஏராளமான கைவினைப் பொருள்கள் விழாவில் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT