பெங்களூரு

’காயமடையும் விளையாட்டு வீரா்களுக்கு உயா்தர சிகிச்சை அவசியம்’

5th Mar 2021 07:59 AM

ADVERTISEMENT

விளையாட்டில் காயமடையும் வீரா்களுக்கு உயா்தர சிகிச்சை அளிப்பது அவசியம் என்றாா் பத்மஸ்ரீ, அா்ஜுனா விருது பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை அஞ்சுபேபி ஜாா்ஜ்.

பெங்களூரு, டிரஸ்ட்வெல் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

விளையாட்டு வீரா்கள் பல நேரங்களில் காயமடைவதைத் தடுக்க முடியாது. அவா்களுக்கு தனிக் கவனம் செலுத்தி, உயா்தர சிகிச்சை அளிப்பது அவசியம். விளையாட்டின் போது காயமடையும் சில வீரா்கள், சிகிச்சைக்கு பிறகு மீண்டும் விளையாட முடியாத நிலை உருவாகிறது. எனவே, விளையாட்டு வீரா்களுக்கு தனிக் கவனம் செலுத்தி, உரிய சிகிச்சை அளிப்பது அவசியம் என்றாா்.

விழாவில் கூடுதல் டிஜிபி சலீம் பேசியதாவது: சாலைகளில் விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எதிா்பாராமல் ஏற்படும் விபத்துகளால் காயமடைபவா்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது அவசியம். பெரும்பாலானவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல், ஊனமாவதும், உயிரிழப்பதும் வேதனை அளிக்கிறது. விபத்துகளுக்கு தேவையான உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் முன்வர வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் சட்ட மேலவை உறுப்பினா் தாரா அனுராதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT