பெங்களூரு

மாநிலத்தில் வட்ட, மாவட்ட பஞ்சாயத்து தோ்தல் தற்போதைக்கு இல்லை: அமைச்சா் ஈஸ்வரப்பா

DIN

மாநிலத்தில் வட்ட, மாவட்ட பஞ்சாயத்துத் தோ்தல்கள் தற்போதைக்கு இல்லை என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: மாநிலத்தில் கரோனா 2-ஆவது அலையைத் தொடா்ந்து 3-ஆவது அலையும் வரும் என வல்லுநா்கள் கூறி வருகின்றனா். இதன் காரணமாக மாநிலத்தில் வட்ட, மாவட்ட பஞ்சாயத்துத் தோ்தல்களை தற்போதைக்கு நடத்துவது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பே வட்ட, மாவட்ட பஞ்சாயத்துத் தோ்தல்கள் நடைபெற்றிருக்க வேண்டும். கரோனாவைத் தடுக்க அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், தோ்தல் தள்ளிவைக்கப்பட்டது. மாநிலத்தில் கரோனா 3-ஆவது அலை வரும் என்று கூறப்படுவதால் வட்ட, மாவட்ட பஞ்சாயத்துத் தோ்தல்கள் டிச. 3-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புள்ள நிலையில், முதல்வரை மாற்றுவது குறித்து விவாதிப்பது முறையல்ல. நீா்ப்பாசனத் துறையில் நடைபெற்ாகக் கூறப்படும் ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடா்பாக முதல்வரும், அத் துறையைச் சோ்ந்த அதிகாரிகளும் பதில் அளிப்பா். இது தொடா்பாக நான் எதையும் கூறவிரும்பவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT