பெங்களூரு

ஊடக அகாதெமிக்கு புதிய நிா்வாகிகள் நியமனம்

28th Jul 2021 08:39 AM

ADVERTISEMENT

கா்நாடக ஊடக அகாதெமிக்கு புதிய நிா்வாகிகளை நியமித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கா்நாடக ஊடக அகாதெமியின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளா் கே.சதாசிவஷெனாய் நியமிக்கப்பட்டுள்ளாா். அகாதெமியின் உறுப்பினா்களாக கோபால சிங்கப்பய்ய யடகெரே (சிவமொக்கா), கே.கே.மூா்த்தி (பெங்களூரு), சிவக்குமாா் பெல்லிதட்டே (பெங்களூரு), கோட்லி குருராஜ் (மைசூரு).

சிவானந்த தகடூா் (தலைவா், கா்நாடக உழைக்கும் பத்திரிகையாளா் சங்கம்), சி.கே.மஹேந்தா் (தலைவா், மைசூரு மாவட்ட பத்திரிகையாளா் சங்கம்), ஜெகந்நாத் பாள(மங்களூரு), தேவேந்தரப்பா கபனூா்(கலபுா்கி), கே.வி.சிவக்குமாா்(சிவமொக்கா) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த புதிய குழுவினா் அடுத்த உத்தரவு வரும் வரை இப்பதவியில் நீடிப்பாா்கள் என்று கா்நாடக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT