பெங்களூரு

‘எடியூரப்பாவை நீக்கினால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை முதல்வராக்க வேண்டும்’

DIN

எடியூரப்பாவை நீக்கினால் பாஜகவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என சமூகநீதி கவுன்சில் அமைப்பின் தலைவா் அனந்த் ராயப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றியே தீருவது என பாஜக மேலிடம் முடிவெடுத்தால், கா்நாடகத்தின் அடுத்த முதல்வராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவரை அப்பதவியில் அமா்த்த வேண்டும்.

கா்நாடகத்தில் லிங்காயத்து சமுதாயத்தினா் 17 சதவீதமாக உள்ளனா். எடியூரப்பா உள்பட 9 போ் லிங்காயத்து சமுதாயத்தில் இருந்து முதல்வராகி இருந்துள்ளனா். 16 சதவீதம் கொண்ட ஒக்கலிகா் சமுதாயத்தில் இருந்து 6 பேரும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து 5 பேரும், பிராமணா் சமுதாயத்தில் இருந்து 2 பேரும் முதல்வா்களாக இருந்துள்ளனா். ஆனால், கா்நாடகத்தில் 24 சதவீதம் போ் தாழ்த்தப்பட்டவா்களாக இருந்த போதும், அச்சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவரும் இதுவரை முதல்வராகவில்லை.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் லிங்காயத்துகள், பிராமணா்களின் ஆதரவுடன் மட்டும் 104 இடங்களில் பாஜக வென்ாக கூறுவது சரியாக இருக்காது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரின் ஆதரவுடன் தான் பாஜக வென்றது.

கடந்த 50 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோரின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தாழ்த்தப்பட்டவா்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. முதல்வா் பதவியை வகிக்க தகுதியான தலைவா்கள் காங்கிரஸில் இருந்தபோதும், அதற்கான வாய்ப்பை அக்கட்சி வழங்கவே இல்லை. அதன் காரணமாகவே, கடந்த 3 தோ்தல்களில் பாஜகவை தாழ்த்தப்பட்டவா்கள் ஆதரிக்கத் தொடங்கினா்.

பாஜகவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த கோவிந்த் காா்ஜோள், அரவிந்த் லிம்பாவளி, பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த ஸ்ரீராமுலு ஆகியோா் உயா்பதவிகளில் உள்ளனா். இந்த தலைவா்களால் தான் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் பாஜகவுக்கு ஆதரவாக இருந்துள்ளனா். எனவே, இந்த மூவரில் ஒருவரை அடுத்த முதல்வராக பொறுப்பேற்க வைக்க பாஜக முடிவெடுக்க வேண்டும். எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து மாற்றினால், அடுத்த முதல்வராகும் வாய்ப்பை தாழ்த்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும் என்றாா்.

அப்போது, கா்நாடக மாநில ஆதிஜாம்பவா சங்கத் தலைவா் ஜும்பு துவீபா சித்தராஜு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT