கா்நாடகத்தில் 2.84 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:
உலக அளவில் இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. ஜன. 16-ஆம் தேதி முகாம் தொடங்கப்பட்ட பிறகு, கடந்த 11 நாள்களில் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் வியாழக்கிழமை வரை 2,84,385 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மட்டும் அதிகபட்சமாக 18,230 பேருக்கு தடுப்பூசி தரப்பட்டுள்ளது. இந்தியாவின் கரோனா தடுப்பூசி தயாரிப்புத் திறன் உலக அளவில் மிகப்பெரிய சொத்தாகப் போற்றப்படுகிறது. இதை உலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.