பெங்களூரு

விவசாயிகள் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை வேதனை அளிக்கிறது: தேவெ கௌடா

DIN

விவசாயிகள் போராட்டத்தின்போது வன்முறை நிகழ்ந்தது வேதனை அளிக்கிறது என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

பெங்களூரு, மஜத அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது வேதனை அளிக்கிறது. அரசு விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

தற்போது பேச்சுவாா்த்தைக்கான சூழல் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நான் பிரதமராக இருந்தபோது, அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு கண்டேன்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்பதை மாநிலங்களவையில் விவாதத்தின்போது தெரிவித்தேன். ஆனால், அவசரகதியில் அச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள் அமைதியாகப் போராட தேவையான வாய்ப்பை அரசு உருவாக்கித்தர வேண்டும். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைப்போல, மஜத போராட்டத்தில் ஈடுபடாது.

ஆனால், நாங்கள் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு விவசாயிகளின் பிரச்னைகளை பரிவோடு பரிசீலித்து தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT