பெங்களூரு

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு: மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா்

DIN

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது காங்கிரஸ் கட்சியின் கடமையாகும் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து அவா் பேசியதாவது:

நாட்டிற்கே உணவளிக்கும் விவசாயிகள் தற்போது பிரச்னையில் சிக்கியுள்ளனா். அவா்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காகப் போராடி வருகின்றனா். அவா்களின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பது காங்கிரஸ் கட்சியின் கடமையாகும்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதைவிடுத்து, டிராக்டா் பேரணியைத் தடுத்தது சரியான நடவடிக்கை அல்ல.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது.

இதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதால், மக்கள் சாலையில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபடுபவா்களை நசுக்க அரசு முயற்சி மேற்கொள்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன் காா்கே, மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவா் சலீம் அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT