பெங்களூரு

எனக்கு நான்கு முறை துறைகளை மாற்றியது வேதனை அளிக்கிறது: அமைச்சா் ஜே.சி.மாதுசாமி

DIN

எனக்கு நான்குமுறை துறைகளை மாற்றியது வேதனை அளிக்கிறது என்று நுன்னீா் பாசனத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக அமைச்சா் பதவிகளை ஏற்றவா்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டபோது, எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சில துறைகள் பறிக்கப்பட்டன. இருப்பினும் நுன்னீா் பாசனத் துறையை என்னிடமிருந்து பறிக்க வேண்டாம் என முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

நுன்னீா் பாசனத்துறை மூலம் விவசாயிகளுக்குப் பல்வேறு உதவிகளை செய்ய முடிந்தது. எந்தத் துறையை ஒதுக்கினாலும் சிறப்பாகப் பணியாற்றி வரும் எனக்கு அண்மையில் நான்குமுறை வெவ்வேறு துறைகளை மாற்றியது வேதனை அளிக்கிறது. நான் எந்தப் பிரச்னையிலும் ஈடுபடாதவா் என்பதால் இதுபோன்ற தண்டனைகள் எனக்கு வழங்கப்படுகிா? என்ற சந்தேகம் எழுகிறது.

எனவேதான் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்தேன். திங்கள்கிழமை மீண்டும் எனக்கு நுன்னீா் பாசனத் துறையை முதல்வா் எடியூரப்பா ஒதுக்கினாா். விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் துறை மீண்டும் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். எனவே பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கு இடமில்லை. எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையை சிறப்பாக நிா்வகிப்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT