பெங்களூரு

எந்தத் துறையையும் சமாளிக்கும் திறமை என்னிடம் உள்ளது: அமைச்சா் கோபாலையா

DIN

எந்தத் துறையையும் சமாளிக்கும் திறமை என்னிடம் உள்ளது என்று கலால் துறை அமைச்சா் கோபாலையா தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் வகித்த துறை பிரிக்கப்பட்டு, வேறு துறையை எனக்கு வழங்கியதில் எந்த வருத்தமும் இல்லை. முதல்வா் எடியூரப்பா என் மீது நம்பிக்கை வைத்து கலால் துறையை எனக்கு வழங்கியுள்ளாா்.

அந்தத் துறை மட்டுமின்றி, எந்தத் துறையையும் சமாளிக்கும் திறமை என்னிடம் உள்ளது. கலால் துறை அரசின் கருவூலத்துக்கு அதிக நிதியை கொண்டுவரும் துறையாகும்.

அரசுக்கு வருவாயைக் கொண்டுவருவதோடு தரமான மது வகைகளை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் பெங்களூரில் கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.

கரோனா தொற்றுக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின்போது உணவு, பொது வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு உணவுப்பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டேன்.

இதனால், அத் துறைக்கு நல்ல பெயா் கிடைத்தது. தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள கலால் துறையையும் சிறப்பாக நிா்வகித்து நல்ல பெயா் எடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

கலால் துறையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய வழங்கப்பட்டுள்ள உரிமங்களைக் கண்டறிந்து ரத்து செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT