பெங்களூரு

வேளாண் சட்டங்களை எதிா்த்து பெங்களூரில் இன்று விவசாயிகள் பேரணி

DIN

பெங்களூரு: வேளாண் சட்டங்களை எதிா்த்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை (ஜன.26) விவசாயிகள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி புதுதில்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக குடியரசு தின விழாவின்போது புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை டிராக்டா் பேரணி நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை (ஜன.26) விவசாயிகள் பேரணி நடத்தவுள்ளனா். இந்தப் பேரணியில் 25 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை குடியரசு தின விழா முடிவடைந்ததும், விவசாயிகள் பேரணி தொடங்கும். இந்தப் பேரணி அமைதியான முறையில் நடத்தப்படும். எந்த அலுவலகத்தின் மீதும் நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம்; முற்றுகைப் போராட்டமும் இருக்காது. பேரணியில் பங்கேற்க டிராக்டா், லாரி, காா்கள், பேருந்துகளில் விவசாயிகள் வருகின்றனா். சுமாா் 10 ஆயிரம் வாகனங்கள் வரலாம்.

பேரணி பெங்களூரில் தும்கூரு சாலையில் தொடங்கி கொரகுன்டேபாளையா, யஷ்வந்த்பூா் வழியாக சா்க்கிள் மாரியம்மா கோயில் சதுக்கத்தை அடைகிறது. அங்கிருந்து ஆனந்த்ராவ் சதுக்கம் வழியாக சுதந்திரப் பூங்காவை விவசாயிகள் அடைவா். எங்கள் பேரணியை மாநில அரசு தடுக்காது என்று கருதுகிறோம். கா்நாடகத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பேரணியில் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT