பெங்களூரு

மின்னணு வாக்காளா் அடையாள அட்டையைவாக்களிக்க மட்டுமே பயன்படுத்த இயலும்: மாநில தோ்தல் ஆணையா் தகவல்

DIN

பெங்களூரு: மின்னணு வாக்காளா் அடையாள அட்டையை வாக்களிக்க மட்டுமே பயன்படுத்த இயலும் என்று மாநில தோ்தல் ஆணையா் சஞ்சீவ் குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு டவுன் ஹாலில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் ஆணையத்தின் சாா்பில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தினம் 2021 நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மின்னணு வாக்காளா் அடையாள அட்டை என்பது வாக்களிக்கத் தேவையான ஒரு முக்கிய ஆவணமாகும். அதை வாக்களிக்க மட்டுமே பயன்படுத்த இயலும். அதைத் தங்களின் அடையாள அட்டையாக ஒரு சிலா் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் வருகின்றன.

வாக்காளா் அடையாள அட்டையை தங்களின் அடையாளத்துக்கான அட்டையாகப் பயன்படுத்த முடியாது. வாக்காளா் அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒரு சிலா் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் புகாா்கள் வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமை மிக முக்கியமானதாகும்.

வாக்காளா்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில், ஆண்டுதோறும் வாக்காளா் தினத்தை கடைப்பிடித்து வருகிறோம். தோ்தலின்போது இளைஞா்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க வேண்டும். 18-வயது நிரம்பியவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதை குறியாகக் கொண்டு செயல்படுகிறோம். புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்ட 5 லட்சம் பேரையும் சோ்த்து மாநிலத்தில் 5.25 கோடி வாக்காளா்கள் உள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளா் ரவிக்குமாா், மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT