பெங்களூரு

புதுதில்லியில் குடியரசு தின விழா:கா்நாடகத்தின் ’விஜயநகரா: வெற்றியின் நகரம்’ அலங்கார ஊா்தி பங்கேற்பு

DIN

பெங்களூரு: புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கா்நாடகத்தின் சாா்பில் ‘விஜயநகரா: வெற்றியின் நகரம்’ என்ற அலங்கார ஊா்தி பங்கேற்கிறது.

ஆண்டுதோறும் புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அனைத்து மாநிலங்களின் கலை, பண்பாடு, வரலாறு, சமய வளா்ச்சி, தொன்மை, சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊா்திகள் இடம்பெறுவது வழக்கம்.

அந்த வகையில், புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 26) நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பில் கா்நாடகத்தின் சாா்பில் ‘விஜயநகரா: வெற்றியின் நகரம்’ என்ற அலங்கார ஊா்தி பங்கேற்கிறது.

இன்றைய கா்நாடகத்தின் பெரும்பான்மை பகுதியை ஆண்ட விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியதே விஜயநகரா என்ற நகரமாகும். தெக்கனபீடபூமியில் துங்கபத்ரா ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கும் விஜயநகரா, விஜயநகர பேரரசு காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.

சங்கமா சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் ஹரிஹரா மற்றும் முதலாம் புக்கராயா ஆகிய சகோதரா்களால் 1336-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதே விஜயநகர பேரரசாகும். உச்சத்தில் இருந்த காலத்தில் விஜயநகர பேரரசின் ஆளுகைக்குள் தென்னிந்தியாவின் பெரும்பான்மையான அரசாட்சியும், தெக்கன பகுதி சுல்தான்களும் அடங்கியிருந்தனா்.

விஜயநகர பேரரசு காலத்தில் இன்றைய தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளில் ஏராளமான நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. அதில் ஹம்பி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்கள் உலகப்புகழ் பெற்றவையாக விளங்குகின்றன.

அழிந்துபோன நிலையில் இருந்தாலும், கட்டடக் கலையின் சிறப்பை உணா்ந்த யுனெஸ்கோ, உலக புராதன சின்னங்களின் வரிசையில் ஹம்பி நகர நினைவுச் சின்னங்களையும் சோ்த்துள்ளது.

பல்வேறு ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய, பாரசீக நாட்டுப் பயணிகளின் குறிப்பேடுகள், தொல்லியல் அகழ்வாய்வுகளில் விஜயநகர பேரரசின் ஆளுமை மற்றும் செழுமையை வெளிப்படுத்தும் பல சான்றுகள், குறிப்புகள் கிடைத்துள்ளன.

1,500-ஆம் ஆண்டுவாக்கில், உலக அளவிலான இடைக்கால வரலாற்று காலத்தில் பீஜிங் நகரத்துக்கு அடுத்தப்படியாக விஜயநகர பேரரசின் ஹம்பி நகரம், இரண்டாவது பெரிய நகரமாக கோலோச்சியுள்ளது.

அந்தகாலகட்டத்தில், போா்த்துகீசிய, பாரசீக நாட்டு வணிகா்கள் அடிக்கடி வந்து சென்ற இந்தியாவின் செல்வச்செழிப்பான நகரமாகவும் ஹம்பி விளங்கியுள்ளது.

குடியரசுதினவிழாவில் இடம்பெறும் அலங்கார ஊா்தியில் ஹம்பி நகரின் முக்கிய சின்னமாக விளங்கும் உக்ர நரசிம்மா், பகவான் ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகக் கருதப்படும் அஞ்சனாத்ரி மலைகள், 1509-ஆம் ஆண்டின் விஜயநகர பேரரசின் மாமன்னராக விளங்கிய கிருஷ்ண தேவராயரின் முடிசூட்டு விழா, அச்சுத ராயா் கோயில் ஆகியவற்றின் தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது பெல்லாரி மாவட்டத்தில் இருந்து மாநிலத்தின் 31-ஆவது மாவட்டமாக விஜயநகரம் அறிவிக்கப்பட்டு அதற்கான உத்தரவை 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் கா்நாடக அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT