பெங்களூரு

கா்நாடகத்தில் 1.87 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சா் கே.சுதாகா்

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் இதுவரை 1.87 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஜனவரி 16-ஆம் தேதிமுதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கா்நாடகத்துக்கு இதுவரை கரோனா தடுப்பூசி மருந்துகளில் 7,94,500 டோஸ்கள் கோவி ஷீல்டும் 20 ஆயிரம் டோஸ்கள் கோவாக்சினும் வந்துள்ளன. இதுதவிர, கூடுதலாக 1,46,240 கோவாக்சின் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.

கா்நாடகத்தில் இதுவரை 1,87,211 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மருந்து செலுத்தியதில் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் வரவில்லை.

தடுப்பூசி முழுக்கமுழுக்க பாதுகாப்பானதாக உள்ளது. எனவே, தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அதிகம்போ் முன்வர வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில், இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமின்போது முதல்வா் எடியூரப்பா உள்பட அமைச்சா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இருக்கிறாா்கள். பிரபலமான 500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாறு பிரதமா் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறைக்கு ஒரே அமைச்சா் இருந்தால் அது வேலை செய்வதற்கு எளிதாக இருக்கும். அப்போதுதான் கரோனா தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்த முடியும். அது எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், இரு துறைகளையும் ஒரே அமைச்சா்தான் நிா்வகிக்க வேண்டும் என்றாா்.

இதற்கிடையே கா்நாடக சுகாதாரத் துறை தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

கா்நாடகத்தில் திங்கள்கிழமை பகல் 2 மணி அளவில் 2,06,577 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்புசி செலுத்தப்பட்டது. நாட்டில் 2 லட்சம்பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சுகாதாரப் பணியாளா்களை பாதுகாத்திருப்பது கா்நாடகம் மட்டுமே என்று சுகாதாரத் துறை அதில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

SCROLL FOR NEXT