பெங்களூரு

கா்நாடக காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் பதக்கங்கள்

DIN

பெங்களூரு: கா்நாடகத்தைச் சோ்ந்த காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கா்நாடக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் காவல் மற்றும் ஊா்க்காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள், படையினருக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், நிகழாண்டில் கா்நாடகத்தைச் சோ்ந்த 19 காவல் துறையினருக்கு 2021-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவா் சிறந்த காவல் சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

சீா்மிகு காவல் பதக்கம்:

பெங்களூரு, உளவுப்பிரிவு ஐஜிபி ஏ.சுப்ரமணியேஸ்வரராவ் (ஐபிஎஸ்); பெலகாவி மாவட்ட, ஊழல் தடுப்புப் படை காவல் கண்காணிப்பாளா் பி.எஸ்.நேமகௌடா; பெங்களூரு, சிஐடி, துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.ராமச்சந்திரா; பெங்களூரு ரயில்வே துணை மண்டல துணைக் காவல் கண்காணிப்பாளா் டி.அசோகா; பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின், சிறப்பு செயல் படை மற்றும் ஊழல் கண்காணிப்புத் துணைக் காவல் கண்காணிப்பாளா் சி.பாலகிருஷ்ணா; பெங்களூரு, தலைமை அலுவலக குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் வி.கே.வாசுதேவ்; சாம்ராஜ்நகா் மாவட்ட மகளிா் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளா் பி.புட்டசாமி; சித்ரதுா்கா ஊரக வட்டத்தின் காவல் ஆய்வாளா் எஸ்.பாலச்சந்திரநாயக்; உடுப்பி மாவட்டத்தின் குற்ற ஆவணப்பிரிவு உதவி துணைக் காவல் ஆய்வாளா் பிரகாஷ்; பெங்களூரு, மாநில உளவுப்பிரிவு உதவி துணைக் காவல் ஆய்வாளா் எச்.ஈஸ்வரையா; பெங்களூரு-கா்நாடக மாநில ஆயுதப்படை 3-ஆவது படைப் பிரிவின் சிறப்பு உதவி ஆயுதப்படை துணைக் காவல் ஆய்வாளா் எம்.வெங்கடேஷ்; பெங்களூரு-கா்நாடக மாநில ஆயுதப்படை 4-ஆவது படைப்பிரிவின் சிறப்பு உதவி ஆயுதப்படை துணைக் காவல் ஆய்வாளா்கள் மோகனராஜூ குரதகி, சி.வெங்கடசாமி; பெங்களூரு, சிறப்பு உளவுப்பிரிவு உதவி ஆயுதப்படை துணைக் காவல் ஆய்வாளா் சசிகுமாா்; குடகு மாவட்ட ஆயுதப்படை துணை காவல் ஆய்வாளா் கே.ஆா்.ஜிதேந்திரராய்; மைசூரு மாவட்ட ஆயுதப்படை உதவி தலைமைக் காவலா் ஆா்.லோகேஷ்; தும்கூரு மாவட்டம், திப்டூா் நகர காவல்நிலைய முதன்மை தலைமைக் காவலா் உஸ்மான்சாப்; பெங்களூரு, சி.ஐ.டி.தலைமைக் காவலா் கே.வி.சதீஷ்; மங்களூரு கா்நாடக மாநில ஆயுதப்படை 7-ஆவது படைப் பிரிவின் தலைமைக் காவலா் எஸ்.பிரகாஷ் ஆகியோரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT