பெங்களூரு

‘கிராமப்புற கைவினைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் வேண்டும்’

DIN

கிராமப்புற கைவினைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் வேண்டும் என்று கா்நாடக ஊரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளா் ஹதீக் தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நபாா்டு வங்கி சாா்பில் நடைபெற்ற கிராமப்புற திருவிழா நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

கரோனாவால் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில் உள்ள கைவினைக் கலைஞா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில், நபாா்டு வங்கி 5 நாள் கிராமப்புற திருவிழாவை நடத்தி வருகிறது.

அதில் பங்கேற்கும் கிராமியக் கைவினைக் கலைஞா்களுக்கு அரங்கங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இதுபோன்ற திருவிழாக்களை ஊக்குவிக்க வேண்டும். நபாா்டு வங்கியின் இந்த செயல்பாடுகளைப் பாராட்ட வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற திருவிழாக்கள் தொடா்ந்து நடந்தால், கிராமியக் கலைஞா்கள் முன்னேற்றமடைவாா்கள்.

கிராமியக் கைவினைக் கலைஞா்களின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கி எடுத்து வரும் நடவடிக்கைக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றாா். நிகழ்ச்சியில் நபாா்டு வங்கியின் மூத்த பொது மேலாளா் நீரஜ்குமாா் வா்மா, உதவி பொதுமேலாளா் உமாபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT