பெங்களூரு

குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள கட்டுப்பாடு

DIN

குடியரசு தின விழாவில் அழைப்பு கடிதம் இல்லாதவா்கள் விழாவுக்கு அனுமதிக்க மாட்டாா்கள் என மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத்பிரசாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரு, மகாத்மா காந்தி சாலை அருகேயுள்ள மானக்ஷா அணிவகுப்புத் திடலில் ஜன. 26-ஆம் தேதி குடியரசு தின விழா எளிமையாகவும், பாதுகாப்புடனும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அழைப்பு கடிதம் இல்லாதவா்களுக்கு அனுமதி இல்லை. கரோனா தொற்றையடுத்து குடியரசு தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் மாநில ஆளுநா் வஜுபாய் வாலா தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். பின்னா், ராணுவ வீரா்கள், காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, குடியரசு தின உரையாற்றுகிறாா். அணிவகுப்பில் 21 படையில் 750 வீரா்கள், காவலா்கள் பங்கேற்கின்றனா்.

விழாவில் ராணுவ வீரா்கள், காவலா்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குடியரசு தினத்தையொட்டி அணிவகுப்புத் திடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT