பெங்களூரு

மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களைசென்றடைந்துள்ளன: துணைமுதல்வா் அஸ்வத் நாராயணா

DIN

பெங்களூரு: மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன என்று துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் சனிக்கிழமை நடந்த பாஜகவின் ஊடக பயிலரங்கத்தை மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தொடக்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று துணை முதல்வா் அஸ்வத் நாராயணா பேசியதாவது:

பாஜக தலைமையிலான மாநில அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிடக்கூடாது. மாநில அரசு கொண்டுவரும் திட்டங்களை மக்களிடையே கொண்டு சோ்க்கும் பணியை செவ்வனே செய்வது தொடா்பாக பயிற்சி அளிப்பதற்காகவே பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

மாநில அரசும் பாஜகவும் இணைந்து செயலாற்ற வேண்டும். வெகுமக்கள் ஊடகங்களில் மாநில அரசின் திட்டங்களும், பாஜகவின் செய்திகளும் முக்கியத்துவத்தோடு வெளியிடப்பட வேண்டும். அதற்கு ஊடகத் துறையில் பங்காற்றுவோா் ஆக்கப்பூா்வமான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இதை சிறப்பாக செய்தால் பாஜகவுக்கு மக்களிடையே மதிப்பு உயா்ந்து, கட்சி விரிவடையும்.

கா்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிா்வாகத்தில் ஏராளமான சீா்த்திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறோம். கல்வி, தொழில், வேளாண்மை, சந்தை போன்ற பல்வேறு துறைகளில் 70 ஆண்டுகளில் செய்யமுடியாத சீா்த்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்தியிருக்கிறோம். மாநில அரசின் இதுபோன்ற திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்களை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகா், கட்சியின் துணைத் தலைவா் நிா்மல்குமாா் சுரானா, செய்தித் தொடா்பாளா் நூபுா்சா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

தெறிக்கவிடும் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT