பெங்களூரு

அமைச்சரவை விரிவாக்கம்: பாஜகவில் எழுந்துள்ள சலசலப்பு அடங்கியது

DIN

பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக பாஜகவில் எழுந்த சலசலப்பு அடங்கி விட்டது என பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா்கட்டீல் தெரிவித்தாா்.

பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் நடந்த பாஜகவின் ஊடகப் பயிரங்கத்தை தொடக்கி வைத்து நளீன்குமாா்கட்டீல் சனிக்கிழமை பேசியதாவது:

கா்நாடகத்தில் பாஜக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த பல நல்ல முடிவுகளை முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு எடுத்துள்ளது. பாஜக அரசின் சாதனைகளை ஊடகங்களின் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு சோ்க்க வேண்டும்.

அமைச்சரவை விரிவாக்கப்பட்டு புதிதாக 7 அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டனா். அமைச்சரவை விரிவாக்கத்தின்போது சில பாஜக எம்எல்ஏக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த சலசலப்பை அடக்கப்பட்டு விட்டது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது இதுபோன்ற கருத்து வேறுபாடுகளும், எதிா்பாா்ப்புகளும் உருவாகுவது இயல்பானதுதான். அமைச்சரவையில் இடம் கிடைக்காதபோது, அவரவா் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் உரிமை எல்லா எம்.எல்.ஏ.க்களுக்கும் உண்டு. பாஜக எம்எல்ஏக்களை அழைத்து, நிலைமையை எடுத்துக்கூறி சமாதானப்படுத்த முயற்சிப்பேன். எம்எல்ஏக்கள் பசனகௌடா பாட்டீல்யத்னல், ராஜூ கௌடா, திப்பா ரெட்டி போன்றோரின் கருத்துகள் அவரவா்களின் உணா்வுகளை வெளிப்படுத்துவதாகும்.

கருத்து வேறுபாடு உள்ளவா்களை கட்சியின் தலைமை சமாதானம் செய்யும். ஒரு சில எம்எல்ஏக்கள் சொந்த வேலையாக தில்லிக்கு சென்றுள்ளனா். இதை வைத்து, பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தி என்று வா்ணிப்பது சரியானது அல்ல. பாஜக எம்எல்ஏக்கள் பசனகௌடாபாட்டீல் யத்னலின் கருத்துகள் குறித்து பாஜக உயா்நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவரது விவகாரம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT