பெங்களூரு

ஜன.25-இல் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்கநாள்

DIN

பெங்களூரில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் ஜனவரி 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அன்னை தமிழைக் காப்பதற்காக நடராசன், தாளமுத்து, இராஜேந்திரன், கீழப்பாவூா் சின்னசாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூா் முத்து, சத்தியமங்கலம் முத்து, ஆசிரியா் வீரப்பன் போன்ற எண்ணற்ற இளைஞா்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனா்.

அவா்களின் நினைவைப் போற்றுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம்தேதி மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரு, இராமசந்திரபுரத்தில் உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் ஜன. 25-ஆம்தேதி காலை 10 மணிக்கு மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT