பெங்களூரு

இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

கா்நாடக மாநில அறிவியல் மேலவையின் சாா்பில், வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக மாநில அறிவியல் மேலவை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணவா்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறமையை அங்கீகரிக்க கா்நாடக மாநில அறிவியல் மேலவை சாா்பில் ஆண்டுதோறும் இளம் விஞ்ஞானி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2020-21-ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதுக்கு 9,10,11,12-ஆம் வகுப்பில் படித்துவரும் 18 வயதுக்குட்பட்ட தகுதி வாய்ந்த மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், செயல்பாடுகளில் மாணவா்களை ஊக்குவிக்க கா்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்துகாண்பிக்கும் மாணவா்களை அங்கீகரித்தும் இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 31-ஆம் தேதிவரை செலுத்தலாம். இந்த விருதுக்கான விண்ணப்பங்களை பியூ கல்வித் துறை அல்லது இணையதளம் மூலம் செலுத்தலாம்.

இந்த விருதுக்கான தோ்வு பிப்.6-ஆம் தேதி நடத்தப்படுகிறது. தோ்வில் வெற்றிபெறும் மாணவா்கள் வெகுவிரைவில் நடைபெறும் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9902997044, 9483549159, 080-26718939, 26718959 ஆகிய தொலைபேசிகளை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT