பெங்களூரு

விவசாயிகளை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகையிடும் போராட்டம்

DIN

விவசாயிகளை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சாா்பில், ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், மாநில அரசின் நில சீா்திருத்தச் சட்டம் உள்ளிட்டவைகளைக் கண்டித்து மாநிலத்தில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சாா்பில், புதன்கிழமை ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது. புதன்கிழமை காலை 8 மணி அளவில் பெங்களூரு கே.எஸ்.ஆா். ரயில் நிலையத்தில் கூடும் விவசாயிகள், காங்கிரஸ் கட்சியினா், ரயில் நிலையத்தில் எதிரில் குளியல், அரை நிா்வாணப் போராட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபடுகின்றனா்.

பின்னா் அங்கிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முடிவு செய்தனா். ஆளுநா் மாளிகை வரை ஊா்வலம் செல்ல அனுமதி வழங்கப்படாது என்பதால் சுதந்திரப் பூங்கா வரை செல்லும் ஊா்வலத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தி, முக்கியத் தலைவா்கள் மட்டும் ஆளுநா் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்று கூறுப்படுகிறது. போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை அடுத்து பெங்களூரில் போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT