பெங்களூரு

மாநிலத்தில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்தியது மகிழ்ச்சி: முதல்வா் எடியூரப்பா

DIN

மாநிலத்தில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கிவைத்த முதல்வா், செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பசுக்களைக் கொல்லக் கூடாது என்பது மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது. அதனை மாநில அரசு நனவாக்கியது. பசுவதை தடைச் சட்டத்தால் இனி மாநிலத்தில் பசுக்கள் கொல்லப்படாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹிந்து மதத்தில் பசுக்களுக்கு புனிதமான இடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பூஜிக்கப்படும் பசுக்களைக் கொல்லக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. இதன் காரணமாக பசுவதைத் தடை சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்தியுள்ளோம். இது, எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றாா்.

பின்னா், பெங்களூரு வந்த அவா் புதிதாகப் பதவி ஏற்ற 7 அமைச்சா்களுக்கு வியாழக்கிழமை துறைகள் ஒதுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT