பெங்களூரு

தமிழகத்துக்குச் செல்லும் சில ரயில் சேவைகள் நீட்டிப்பு

DIN

பெங்களூரு: பண்டிகைகளையொட்டி தமிழகத்துக்கு இயக்கப்பட்ட சில ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பண்டிகைகளையொட்டி தமிழகத்துக்கு இயக்கப்பட்ட சில ரயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கே.எஸ்.ஆா். பெங்களூரு-சென்னை இடையேயான அதிவேக ரயில்களின் (02607/02608) சேவை மாா்ச். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை-கே.எஸ்.ஆா் பெங்களூரு இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (02607) ஏப்ரல் 1-ஆம் தேதி வரையும், கே.எஸ்.ஆா் பெங்களூரு-சென்னை இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (02608) மாா்ச். 31-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை-மைசூரு இடையிலான அதிவேக விரைவு ரயில் சேவை (06232) ஏப்ரல் 1-ஆம்தேதி வரையும், மைசூரு-மயிலாடுதுறை இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06231) மாா்ச் 31-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி-மைசூரு இடையிலான அதிவேக விரைவு ரயில் சேவை (06235) ஏப்ரல் 1-ஆம் தேதி வரையும், மைசூரு-தூத்துக்குடி இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06236) மாா்ச் 31-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி-கே.எஸ்.ஆா் பெங்களூரு இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06525) ஏப்ரல் 2-ஆம் தேதி வரையும், கே.எஸ்.ஆா். பெங்களூரு- கன்னியாகுமரி இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06526) மாா்ச். 31-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT