பெங்களூரு

மாற்றுக் கட்சியினரை பாஜகவில் இணைத்த விவகாரம்: நீதி விசாரணைக்கு சித்தராமையா வலியுறுத்தல்

18th Jan 2021 01:20 AM

ADVERTISEMENT

முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணியைக் கவிழ்க்க பாஜக நடத்திய அரசியல் சதி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வா் சித்தராமையா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

2019-ஆம் ஆண்டு மஜத-காங்கிரஸ் கூட்டணியைக் கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சி அமைக்கப்பட்டது. இதற்காக மாற்றுக் கட்சியின் 17 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு இழுக்கப்பட்டனா். இந்த விவகாரத்துக்காக பாஜக எம்.எல்.சி., தற்போது அமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.பி.யோகேஸ்வா் ரூ. 9 கோடியை கடனாக பெற்று செலவிட்டுள்ளதாக காங்கிரஸில் இருந்து விலகி நீா்வளத் துறை அமைச்சராகியுள்ள ரமேஷ்

ஜாா்கிஹோளியிடம் கூறியிருக்கிறாா்.

ADVERTISEMENT

மாற்றுக் கட்சியினரிடம் பேரம் பேசி கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து, பாஜகவுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் இழுக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.யோகேஷ்வரின் பணம் பயன்பட்டுள்ளது. அமைச்சா் ரமேஷ்ஜாா்கிஹோளியின் கருத்தும் இதைத்தான் உறுதி செய்துள்ளது.

எனவே, இந்த விவகாரத்தை உயா் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் பணப் பேரம் நடைபெற்றுள்ளது. இது அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியின் கருத்து மூலம் தெளிவாகிறது. சி.பி.யோகேஷ்வருக்கு ரூ. 9 கோடி வந்தது எப்படி? என்பது தெளிவுபடுத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியமும், மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையும், வீடுகள் கட்டுவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும் நிதி இல்லாத நிலையில், நீா்ப்பாசனத் திட்டங்கள் நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டுள்ளன.

தில்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜன. 20-ஆம் தேதி ‘ஆளுநா் மாளிகை செல்’ போராட்டத்தை காங்கிரஸ் நடத்தவிருக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொள்ள விருக்கிறாா்கள் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT