பெங்களூரு

விக்டோரியா மருத்துவமனையில் இன்று முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்படும்

18th Jan 2021 01:15 AM

ADVERTISEMENT

விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை (ஜன. 18) முதல் மீண்டும் செயல்படுகிறது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய அளவில் கரோனா தொற்று பரவியதையடுத்து, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. தற்போது கரோனா தொற்று பரவல் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை முதல் செயல்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT