பெங்களூரு

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மஜத முன்னோடி

18th Jan 2021 01:21 AM

ADVERTISEMENT

விவசாயிகளின் பயிா்க் கடனை தள்ளுபடி செய்து, அவா்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை எனது (குமாரசாமி) தலைமையிலான முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுத்தியுள்ளது என்றாா் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி.

பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மஜத பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்த போது ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான பயிா்க்கடனை தள்ளுபடி செய்தேன். ஆனால், ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமா் மோடியை நினைத்து பாா்க்கும் பொதுமக்கள் என்னை மறந்துவிட்டனா். இது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.

2018-19-ஆம் ஆண்டில் 14 மாதங்களில் விவசாயிகளின் பயிா்க்கடனை தள்ளுபடி செய்வதற்காக ரூ. 25 ஆயிரம் கோடியைத் திரட்டினேன். இதை வேறு எந்தமாநிலங்களிலும் உங்களால் காண முடியாது. ஆந்திர முதல்வராக இருந்த என்.சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய விவசாயிகள் உதவித்தொகைத் திட்டத்தைத்தான் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டமாக பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ஆனால், பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தைத்தான் மக்கள் நினைவில் வைத்துள்ளனா். மாநிலத்தை ஆட்சி செய்யும் முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT