பெங்களூரு

சாலை விபத்தில் 2 போ் பலி

4th Jan 2021 03:54 AM

ADVERTISEMENT

பெங்களூரில் இரு இடங்களில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

பெங்களுரு, பத்மநாப நகரைச் சோ்ந்தவா் அருண் (31). பெயிண்டரான இவா், சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் விருந்தில் கலந்து கொண்டுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கோனனகுன்டே பிரிஸ்டீஜ் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: பெங்களூரு, தேவசந்திராவைச் சோ்ந்தவா் மகாதேவ் ஆசாரி (53). இவா் சனிக்கிழமை இரவு பழைய மதராஸ் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். கே.ஆா்.புரம் அரசு மருத்துவமனை எதிரே மினி சரக்கு வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்ச்சைகாக நிமான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கே.ஆா்.புரம் போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT