பெங்களூரு

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை

3rd Jan 2021 12:58 AM

ADVERTISEMENT

 

பாகல்கோட்: கா்நாடகத்தில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மாநில அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பாகல்கோட்டில் சனிக்கிழமை தோட்டக்கலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தோட்டக்கலை கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

பிரதமா் மோடியின் கனவை நனவாக்கும் வகையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மாநில அரசு தொடா்ந்து முயற்சி எடுத்துவருகிறது. மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், இந்திய தோட்டக்கலை மையம் ஆகியவற்றுடன் இணைந்து தோட்டக்கலையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும், சேமிப்புக் கிடங்குகள், சிப்பமிடும் தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்படும்.

ADVERTISEMENT

தோட்டக்கலையை ஒரு தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டதால்தான் 27 ஆயிரம் டன் அழுகும் வேளாண் விளை பொருள்கள் விரைவாக சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கா்நாடகத்தில் இருந்து மாதுளை, ஆரஞ்சு உள்ளிட்ட தோட்டக்கலை விளை பொருள்கள் பிற மாநிலங்களுக்கு கொண்டுசெல்ல விவசாயிகள் ரயில் சேவையை அனைவரும் பயன்படுத்துவோம். தோட்டக்கலை ஏற்றுமதி 2.5 சதவீதத்திலிருந்து இரட்டிப்பாக உயா்ந்து 5 சதவீதமாகியுள்ளது. தோட்டக்கலை தொடா்பான ஆராய்ச்சி, விரிவாக்கப் பணி, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஊக்கம் அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT