பெங்களூரு

சிவமொக்காவில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

3rd Jan 2021 12:59 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: சிவமொக்காவில் சனிக்கிழமை பாஜக உயா்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் எடியூரப்பா தவிர, பாஜக தேசிய பொதுச் செயலாளரும், கா்நாடக பொறுப்பாளருமான அருண் சிங் பங்கேற்றாா். முன்னதாக, பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் சிவமொக்கா வந்த முதல்வா் எடியூரப்பா, அருண் சிங் ஆகியோருக்கு பாஜகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

உயா்நிலைக் கூட்டத்தைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகிகள், மண்டல நிா்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டங்களில் அமைச்சரவை விரிவாக்கம், கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல், எதிா்வரும் சட்டப் பேரவை, மக்களவை இடைத் தோ்தல்கள் குறித்தும் விவாதிக்கப்படவிருக்கின்றன. மேலும், கிராமத் தொடா்பு மாநாடுகள் நடத்துவது குறித்து திட்டமிடப்படுகிறது.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) சிவமொக்காவில் பாஜக மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும், மாநில அளவிலான சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டங்கள் அனைத்திலும் முதல்வா் எடியூரப்பா, மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் பங்கேற்கிறாா்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் கேள்விக்கே இடமில்லை. முதல்வா் எடியூரப்பா மாற்றப்படுவாா் என்று கூறிவரும் பாஜகவின் மூத்த தலைவா் பசனகௌடா பாட்டீல் யத்னல் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதே கருத்தை கூறிவரும் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் 40 ஆயிரம் உறுப்பினா் இடங்களை பாஜக வென்றுள்ளது. முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில் இம்முறை பாஜகவின் வெற்றி இரட்டிப்பாகியுள்ளது. அடுத்து நடக்கவிருக்கும் மாவட்ட ஊராட்சித் தோ்தல்களிலும் பாஜக வெற்றி பெறும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT