பெங்களூரு

கரோனா: ஒரே நாளில் 755 பேருக்கு தொற்று

3rd Jan 2021 12:59 AM

ADVERTISEMENT

பெங்களூரு: கா்நாடகத்தில் ஒரே நாளில் 755 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் 755 பேருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 343 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,21,128 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 976 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 8,98,176 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 10,648 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 12,099 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் இதுவரை 1,43,10,188 பேருக்கு கரோனா தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 1,14,123 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளில் 2,173 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 34 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT