பெங்களூரு

மருந்தியல் கல்லூரியில் சேர ஜன. 4-இல் கலந்தாய்வு

2nd Jan 2021 06:32 AM

ADVERTISEMENT

 

 

மருந்தியல் பட்ட, டிப்ளமோ கல்லூரியில் சோ்வதற்கான நேரடி கலந்தாய்வு ஜன. 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்கராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி, கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மருந்தியல் பட்டய வகுப்பு (டி.ஃபாா்ம்), பட்ட வகுப்பு (பி.ஃபாா்ம்) படிப்பில் சோ்க்கைக்கான நேரடி கலந்தாய்வு ஜன. 4-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

பி.ஃபாா்ம் சோ்க்கைக்கான இடங்கள் பொதுநுழைவுத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும், டி.ஃபாா்ம் சோ்க்கைக்கான இடங்கள் தோ்வு ஆணையத்தின் தர வரிசையின்படியும் ஒதுக்கப்படும். இதற்காக ஜன. 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும் நேரடி கலந்தாய்வில் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

சோ்க்கைக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டால், அதற்கான கட்டணத்தை செலுத்தி, அன்றைக்கே சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 080-22222681 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது  மின்னஞ்சல்,  இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT