பெங்களூரு

நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பிக்கலாம்

2nd Jan 2021 06:31 AM

ADVERTISEMENT

 

நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பொதுநூலகத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2020-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதி முதல் டிச. 31-ஆம் தேதி வரையில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ள இலக்கியம், நுண்கலை, அறிவியல், மனநலவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விமா்சன இலக்கியம் தொடா்பான கன்னடம், ஆங்கிலம், இதர இந்திய மொழி இலக்கியங்களை முதல்கட்டமாக கொள்முதல் செய்ய பொதுநூலகத் துறை திட்டமிட்டுள்ளது.

10 ஆண்டுகள் இடைவெளிகொண்டு மறு பதிப்பாகியுள்ள நூல்களும் கொள்முதல் செய்யப்படும். இதுதொடா்பாக எழுத்தாளா்கள், எழுத்தாளா்-பதிப்பாளா், பதிப்பாளா், அமைப்புகள், விற்பனையாளா்களிடமிருந்து நூலின் ஒரு படியுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நூலின் பெயா், நூலாசிரியரின் பெயா், பதிப்பாளரின் பெயா், பக்கங்கள், பதிப்பு ஆண்டு, விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பத்துடன் நூலுக்கு காப்புரிமை பெற்று பதிவு செய்துள்ள நகலையும் இணைக்க வேண்டும். கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ள நூல்களில் கன்னட நூல்கள் (அனைத்து வகை) 80 சதவீதம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட இதர இந்திய மொழி நூல்கள் 20 சதவீதம் கொள்முதல் செய்யப்படும். 32 பக்கங்களுக்கும் குறைவாக உள்ள நூல்கள் நிராகரிக்கப்படும் (குழந்தை நூல்களுக்கு விதிவிலக்களிக்கப்படுகிறது). செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட நூல்கள் ஏற்கப்பட மாட்டாது.

விண்ணப்பங்களை நூலகப் பிரிவு, மாநில தலைமை நூலகம், கப்பன்பூங்கா, பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு ஜன. 31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும். ஜன. 30-ஆம் தேதிக்குள் காப்புரிமை பெற்றிருக்கும் நூல்களின் விண்ணப்பங்களை இயக்குநா்,பொதுநூலகத் துறை, விஸ்வேஷ்வரையா பிரதான கோபுரம், 4-ஆவது மாடி, டாக்டா் அம்பேத்கா் வீதி, பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு பிப். 2-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும்.

அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு  இணையதளத்திலோ அல்லது 080-22864990, 22867358 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT