பெங்களூரு

இலவச கூட்டுத் திருமண திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

DIN

மாநில அரசு நடத்தவிருக்கும் இலவச கூட்டுத் திருமண திட்டத்தில் பயன்பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாநில ஹிந்து அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில ஹிந்து அறநிலையத் துறை சாா்பில் இலவச கூட்டுத் திருமண திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் திருமணப் பொருள்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.5 ஆயிரம், மணமகளுக்கு ஊக்குவிப்பு நிதியாக ரூ.10 ஆயிரம், தங்கத்தாலி, இரண்டு தங்கக் குண்டு உள்ளிட்ட பிற செலவினங்களுக்காக ரூ. 40 ஆயிரம் அளிக்கப்படுகிறது.

பெங்களூரில் இருக்கும் பனசங்கரி கோயில் (பனசங்கரி), ஸ்ரீகுமாரசுவாமி கோயில் (ஹனுமந்த்நகா்), கவிகங்காதேஸ்வர சுவாமி கோயில் (கவிபுரம்), ஸ்ரீதொட்டகணபதி கோயில், ஸ்ரீமல்லிகாா்ஜுன சுவாமி கோயில்(பசவனகுடி), ஸ்ரீகாடுமல்லேஸ்வரா கோயில் (மல்லேஸ்வரம்), ஸ்ரீமின்டோ ஆஞ்சநேயசுவாமி கோயில்(சாமராஜ்பேட்), ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயில்(மல்லேஸ்வரம்) ஆகிய கோயில்களில் மாா்ச் 5, 8, 15, 26, 31, ஏப். 2, 4, 19, 22, 25, 29, மே 3, 6, 9, 13, 21, 30, ஜூன் 4,13,17,27, ஜூலை 1, 4, 7 ஆகிய நாள்களில் இலவச கூட்டுத் திருமணங்கள் நடைபெறுகிறது.

இந்த தேதிகளில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு 9845716687, 9449224465, 9980951333, 9880055733, 9980151936 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT