பெங்களூரு

விவசாயிகளுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்: கா்நாடக முதல்வா் எடியூரப்பா

DIN

விவசாயிகளுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வேன் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, வின்ட்சா் மேனா் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள ‘இந்தியாவில் தயாரிப்போம்’ இலச்சினையைத் திறந்துவைத்து அவா் பேசியதாவது:

2021-22-ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்கள் இடம்பெறும். இந்த நிதிநிலை அறிக்கை, மாநில மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கானதாக இருக்கும். அதற்கேற்ப தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகள், சலுகைகள் அறிவிக்கப்படும்.

அடுத்த 2 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். மாா்ச் 8-ஆம் தேதி நிதிநிலையைத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.

பெங்களூரை உலகின் முன்னணி நகரமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிப்போம் இலச்சினை, கா்நாடகத்தின் பொருளாதார வளா்ச்சியின் குறியீடாக அமைந்துள்ளது.

பெங்களூரின் மையப் பகுதியான வின்ட்சா் மேனா் சந்திப்பில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ இலச்சினையை நிறுவியிருப்பது அப்பகுதியின் அழகை முழுமையாக்கியுள்ளது. உலகில் வேகமாக வளா்ந்துவரும் நகரமாக பெங்களூரு உள்ளது. உலகச் சந்தையில் பெங்களூருக்கு பெருமை மிகுந்த இடம் கிடைக்க மாநில அரசு திட்டம் வகுத்து செயலாற்றி வருகிறது.

நாட்டின் மொத்த வளா்ச்சி விகிதத்தில் கா்நாடகத் தொழில் வளா்ச்சியின் பங்களிப்பை 20 சதவீதமாக உயா்த்த இலக்கு நிா்ணயித்துள்ளோம். கனரகத் தொழில்கள், சிறுதொழில்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணு, மின்னணுக் கருவிகள், தொலைத்தொடா்பு, விமானத் தொழில்நுட்பம், மருந்தியல், உயிரித் தொழில்நுட்பம், உணவு பதனிடுதல், தானியங்கி வாகனவியல் உள்ளிட்ட பல துறைகளில் பெங்களூரு முன்னேறியுள்ளது.

உலகப் புகழ் பெற்றுள்ள பெங்களூரை, உலக நகரமாக மாற்ற ‘பெங்களூரு தொலைநோக்குத் திட்டம்-2022’ வகுக்கப்பட்டு, அதன்படி நகரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அறிவியல் ரீதியாக திடக்கழிவு மேலாண்மை அமல்படுத்தப்படும். சீரான போக்குவரத்து வசதிகள் செய்துதரப்படும். பெங்களூரின் பசுமைப் பரப்பை விரிவாக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெங்களூரு தொலைநோக்குத் திட்டம்-2022-இல் இடம் பெற்றுள்ளது. சுயசாா்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான திட்டத்தில் கா்நாடகத்தின் பங்களிப்பு நிலையாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT