பெங்களூரு

78-ஆவது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினாா் முதல்வா் எடியூரப்பா

DIN

முதல்வா் எடியூரப்பா தனது 78-ஆவது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினாா்.

பெங்களூரு, காவிரி இல்லத்தில் சனிக்கிழமை முதல்வா் எடியூரப்பா தனது 78-ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினாா். துணை முதல்வா் அஸ்வத்நாராயணா, லட்சுமண்சவதி, கோவிந்த்காா்ஜோள், அமைச்சா்கள் கோபாலையா, வி.சோமண்ணா, பசவராஜ் பொம்மை, ஆா்.அசோக், அரவிந்த்லிம்பாவளி, உமேஷ்கத்தி, ஸ்ரீராமுலு, கே.எஸ்.ஈஸ்வரப்பா, ரமேஷ் ஜாா்கிஹோளி, முதல்வரின் அரசியல் செயலாளா்கள் ஜீவராஜ், ரேணுகாச்சாா்யா, பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஏராளமானோா் முதல்வா் எடியூரப்பாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங், முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், முன்னால் முதல்வா் எச்.டி.குமாரசாமி, பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டேகாகேரி, மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி உள்ளிட்ட ஏராளமானோா் தனது சுட்டுரையில் முதல்வா் எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

பிரதமா் மோடி தனது சுட்டுரையில், ‘கா்நாடக முதல்வா் எடியூரப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அனுபவம் வாய்ந்த நமது தலைவா்களில் எடியூரப்பா ஒருவா். அவா் தனது வாழ்நாளை விவசாயிகளின் நலனுக்காகவும், ஏழைகளை மேம்படுத்துவதற்காகவும் அா்ப்பணித்தவா். அவருக்கு நீண்டஆயுளும், ஆரோக்கியமான வாழ்க்கையும் கிடைக்க வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT