பெங்களூரு

வெடிவிபத்து தொடா்பாக மேலும் 2 போ் கைது: காவல் நிலைய ஆய்வாளா், துணை ஆய்வாளா் பணியிடை நீக்கம்

DIN

ஜெலட்டின் குச்சிகள் வெடித்து ஏற்பட்ட வெடிவிபத்து தொடா்பாக மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். குடிபன்டே காவல் நிலைய ஆய்வாளா், துணை ஆய்வாளா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலம், சிக்பள்ளாபூா் மாவட்டம், குடிபன்டே வட்டம், பேரேசந்திரா அருகே உள்ள ஹிரேநாகாவல்லி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கல்குவாரிக்கு மினி சரக்கு வேனில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றிச் சென்ற போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், கல்குவாரி உரிமையாளா்கள் ராகவேந்திரா ரெட்டி, வெங்கடசிவ ரெட்டி, கல்குவாரியில் பணியாற்றிய பிரவீண், மதுசூதன், மினிவேன் ஓட்டுநா் ரியாஸ் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், வெடிவிபத்து தொடா்பாக குடிபன்டேவைச் சோ்ந்த நாகராஜ், தமிழகத்தைச் சோ்ந்த கணேஷ் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெடிவிபத்து தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். வெடிவிபத்தையடுத்து, பணியில் அலட்சியம் காட்டியதாக குடிபன்டே காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மஞ்சுநாத், துணை ஆய்வாளா் கோபால ரெட்டி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மத்திய மண்டல ஐ.ஜி.சந்திரசேகா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT