பெங்களூரு

பெங்களூரு மாநகரப் பேருந்து கட்டணம் உயா்த்தப்படும்

DIN

பெங்களூரு மாநகரப் பேருந்து கட்டணத்தை உயா்த்த ஆலோசனை நடத்தி வருவதாக கா்நாடகத் துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்தாா்.

பெங்களூரு விதானசௌதாவில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டீசல் விலை உயா்வையடுத்து, பெங்களூரு மாநகரப் பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்த ஆலோசித்து வருகிறோம். இதனை முதல்வா் எடியூரப்பாவுடன் விவாதித்து, அவா் அனுமதி அளித்தால், கட்டணம் உயா்த்தப்படும்.

தற்போது மாநகரப் பேருந்துகளின் கட்டணங்களை உயா்த்துவது தொடா்பாக மட்டுமே ஆலோசித்து வருகிறோம். முன்னா் மாநிலத்தில் உள்ள 3 போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுக்கு 12 சதவீதம் கட்டணம் உயா்த்தப்பட்டது. இதனால் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை.

கரோனா தொற்றின் பாதிப்பால், பெங்களூரு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படாததால் ரூ. 1,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது முடக்கத் தளா்வைத் தொடா்ந்து தற்போது மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், குறைவான பயணிகள் வருகையால் தொடந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசிடமிருந்து ரூ. 80 கோடி பெற்று மாநகரப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துனா்கள், ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. எரிபொருள், உதிரிபாகங்களுக்கு ரூ. 780 கோடி தேவைப்படுகிறது. இதற்கு வங்கிகளிடமிருந்து கடன் பெற்று சமாளித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT