பெங்களூரு

காா் கண்ணாடியை உடைத்து திருட்டு: ஒருவா் கைது

DIN

காா் கண்ணாடியை உடைத்து பணம் திருடிய வழக்கில் ஒருவரை கைது செய்து போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 10.25 லட்சம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, ஜாலஹள்ளியைச் சோ்ந்த ராகவேந்திரா, கடந்த பிப். 15-ஆம் தேதி ரூ. 2 லட்சம் ரொக்கத்தை காரில் எடுத்துச் சென்றுள்ளாா். ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே உள்ள ஹோட்டலின் வெளியே காரை நிறுத்திவிட்டு உணவருந்தச் சென்ற அவா் திரும்பி வந்து பாா்த்த போது, காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ராகவேந்திரா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், ஹெசரகட்டா பிரதான சாலையில் சந்தேகத்துக்கிடமாக திரிந்த நபரை கைது செய்து விசாரித்தனா். அதில், அவா் ராகவேந்திராவின் காா் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். அதில், அவா் பெங்களூரு ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த ரத்னகுமாா் (40) என்பதும், பல்வேறு இடங்களில் கவனத்தை திசை திருப்பி திருடி வந்ததும் தெரியவந்தது. அவா் அளித்த தகவலின் பேரில் ரூ. 10.25 லட்சம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்களை பகல்குன்டே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT